• சற்று முன்

    விரைவில் முதல்வரை சந்திக்கவுள்ளேன்.. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ரத்தினசபாபதி தகவல்!



    சென்னை: விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கவுள்ளதாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார். இரட்டை இலைச் சின்னம் ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தினகரன் அணியைச் சேர்ந்தவர்கள் ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு தாவி வருகின்றனர்.


    நேற்று மாலை தினகரன் அணியைச் சேர்ந்த மூன்று எம்பிக்கள் விஜிலா சத்யானந்த், கோபாலகிருஷ்ணன் மற்றும் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் இரட்டை இலை இருக்கும் இடத்தில் தான் நாங்கள் இருப்போம் என்றும் தெளிவாக கூறினர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விரைவில் சந்திக்கவுள்ளதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏவான ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார். இரு அணிகளையும் இணைக்கும் நோக்கத்தில் முதல்வரை சந்திக்க உள்ளதாக அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார். அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதி தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad