அதிமுக ஆட்சி மன்ற குழு மாற்றி அமைப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன், இலக்கிய அணிச் செயலாளர் பா.வளர்மதி, சிறுபான்மை நலப்பிரிவுத் தலைவர் ஜஸ்டின் செல்வராஜ், மருத்துவ அணிச் செயலாளர் பி.வேணுகோபால் ஆகிய 9 பேர் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஆட்சி மன்றக் குழுவின் தலைவராக இருந்த ஜெயலலிதாவும், உறுப்பினர்களில் ஒருவராக இருந்த விசாலாட்சி நெடுஞ்செழியனும் உயிரிழந்துவிட்ட நிலையில், மதுசூதனன், ஓ.பி.எஸ்., ஜஸ்டின் செல்வராஜ், தமிழ்மகன் உசேன், பி.வேணுகோபால் ஆகிய 5 பேர் மட்டுமே எஞ்சி இருந்தனர். இந்நிலையில், தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், பா.வளர்மதி ஆகியோர் ஆட்சிமன்றக்குழுவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை