மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு - நார்வே வானிலை எச்சரிக்கை
சென்னை: ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யும் என நார்வே நாட்டு
வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தொடங்கியதுமே தீவிரம் காட்டிய பருவமழை பின்னர் ஓய்வெடுக்க தொடங்கியது. காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கின.
வங்கக்கடலின் தென் பகுதியில்
இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலை ஒட்டியுள்ள தென் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் கனமழை
இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தென் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இரவில் கனமழை
இதைத்தொடர்ந்து பிற்பகலில் லேசான மழையும் இரவு நேரத்தில் கனமழையும் பெய்யும் என்றும் நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விட்டு விட்டு லேசான மழை பெய்யும் என்றும நார்வே நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை