தாம்பரத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தாம்பரம் : காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
சில மாதங்களாக தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்த இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில்
இரட்டை இலை சின்னம் முதல்வர் , துணைமுதல்வர் அணிக்கு கிடைக்கபெற்றதை அடுத்து தாம்பரத்தில் அதிமுக சார்பில் காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்டலப்பாக்கம் இராஜேந்திரன் தலைமையில் நகரச்செயலாளர் கூத்தன் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எல்லார் செழியன் மாவட்ட பிரதிநிதி பரசுராமன் நகர கழக அம்மா பேரவை செயலாளர் கோபிநாத் அவைத்தலைவர் சுரேஷ்குமார் முன்னால் நகர்மன்ற உறுப்பினர்கள் சம்பத் , வேலு, மல்லிகாராஜேந்திரன், மஜித்பாய், கோபிநாத்,மஞ்சுலா பிரகாஷ், பொன்னுசாமி, கோபிநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
கருத்துகள் இல்லை