Header Ads

  • சற்று முன்

    மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு


    தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில் டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறைவில்லாத அதிகாரியின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து மீனவர்கள் நலச் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 13 ஆம் தேதி 4 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, இந்திய கடலோர காவல் படையினர் வழிமறித்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீனவர்களை இந்தி பேசச் சொல்லி அடித்து உதைத்ததுடன், மீன்பிடி உபகரணங்களையும் சேதப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.
    அப்போது அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 5 மீனவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் தொடர்புடைய அதிகாரிகளை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்வதோடு, தன்னிச்சையான விசாரணைக்குழு ஒன்றை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டது. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடும், மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த மனு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது.
    அப்போது, இந்த விவகாரத்தில் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் வழக்குப்பதிவு செய்ததாகவும், அதன் விசாரணையை டிஎஸ்பி அல்லது அந்த அந்தஸ்த்திற்கு குறைவு இல்லாத அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவும், மருத்துவ உதவிகளை வழங்கவும் ஆணையிட்டு வழக்கை முடித்து வைத்தது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad