"சாமி 2 படத்திலிருந்து ஏன் விலகினேன்?" - த்ரிஷா விளக்கம்
விக்ரம், த்ரிஷா, விவேக் ஆகியோர் நடித்த 'சாமி' படம் பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் மூலம் தான் த்ரிஷா கமர்ஷியல் ஹீரோயின் ஆனார். இந்தப் படத்தை ஹரி இயக்கி இருந்தார். தற்போது சாமி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் விக்ரம், த்ரிஷாவை காதலித்து திருமணம் செய்து கொள்வார். அதனால் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்திலும் த்ரிஷா நடிப்பதாக இருந்தது. இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டு அட்வான்ஸ் வாங்கினார் த்ரிஷா. படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் படத்திலிருந்து திடீரென விலகிக் கொண்டார் நடிகை த்ரிஷா. இந்த விவகாரம் திரையுலகில் அதிருப்தியை உண்டாக்கியது.
ஏன் விலகினார்
'சாமி 2' படத்தில் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு அதிக முக்கியத்தும் இருப்பதாலும், தனக்கு ஒரு சில காட்சிகளே இருப்பதாலும் த்ரிஷா விலகிக் கொண்டதாகக் கூறப்பட்டது. சாமி படத்தில் விக்ரம் - த்ரிஷா ஜோடி ரசிகர்களால் ரசிக்கப்பட்ட நிலையில், படத்திலிருந்து வெளியேறியது அதிருப்தியை ஏற்படுத்தியது.
தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
இது தொடர்பாக 'சாமி 2' படத்தின் தயாரிப்பளார் ஷிபு தமீம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாருக்கு தயாரிப்பாளர் சங்கம் நடிகை த்ரிஷாவிடம் விளக்கம் கேட்டிருந்தது. தற்போது தனது விளக்கத்தை த்ரிஷா தயாரிப்பாளர் சங்கத்தில் எழுத்துப்பூர்வமாகக் கொடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை