• சற்று முன்

    எந்த பயலும் சுத்தமில்லை: சொல்கிறார் திருட்டுப் பயலே 2 இயக்குனர்



    சென்னை: நம்மில் யாரும் சுத்தமில்லை என்று திருட்டுப் பயலே 2 பட இயக்குனர் சுசி கணேசன் தெரிவித்துள்ளார். சுசி கணேசன் இயக்கியுள்ள திருட்டுப் பயலே 2 படம் வரும் 30ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஹிட்டான திருட்டுப் பயலே படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்த படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் குறித்து சுசி கணேசன் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    சுத்தம் 




    அனைவரும் பொய் சொல்வார்கள். நம்மில் யாரும் சுத்தமில்லை. நல்லவர்கள் பற்றி எழுதி படம் எடுப்பது சுத்த போர். அதனால் தான் திருட்டுப் பயலே தலைப்பை அப்படியே வைத்துக் கொண்டேன்.

    படம் 
    திருட்டுப் பயல் என்ற வார்த்தை படத்தின் ஹீரோவை மட்டும் குறிக்கவில்லை. படத்தில் உள்ள அனைவரும் திருட்டுப் பயல் தான். அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரே பிஜிஎம் தான் பயன்படுத்தி இருந்தோம் என்பதை கவனித்தீர்களா.

    இரண்டாம் பாகம் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது எளிது அல்ல. முதல் படம் போன்று இரண்டாம் பாகத்தை ஹிட்டாக்க வேண்டும். முதல் படம் ஹிட்டானது ஏன் என்று இயக்குனருக்கு தெரியும் என நினைக்கிறார்கள். ஒரு படம் ஏன் ஹிட்டாகிறது, சொதப்புகிறது என்று யாருக்கும் தெரியாது. 

    லிப் லாக் 


    முதல் பாகத்தில் முத்தக் காட்சி இருந்தது. அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அது தற்போது பெரிய விஷயமே இல்லாமல் ஆகிவிட்டது. லிப் டூ லிப் கூட தற்போது பெரிய விஷயம் அல்ல என்கிறார் சுசி.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad