29ந் தேதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு
ஆர்.கே.நகர் அ.தி.மு.க வேட்பாளர் 29-ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என்றும் இன்றும் நாளையும் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன், இன்றும் நாளையும் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்றும் 29-ஆம் தேதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார். வேட்பாளரை ஆட்சிமன்ற குழுவே தீர்மானிக்கும் என்றும் அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை