திக்..... திக்..... கொடநாடு - மாட்டும் அமைச்சர்கள்
நீலகிரி: பல்லாயிரம் கோடி பெருமானமுள்ள பழைய ரூ. 500, ரூ.1000 நோட்டுகள் மாற்றப்பட்டது தொடர்பாக கொடநாடு எஸ்டேட்டில் உள்ள மேலாளர் நடராஜனிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. சசிகலா உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 187-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த வியாழக்கிழமை வருமான வரித் துறை ரெய்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து பெரும்பாலான இடங்களில் இன்று 5-ஆவது நாளாக நடத்தப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட்டிலும் சோதனை நடைபெறுகிறது. இங்கு சசிகலாவுக்கு சொந்தமான கர்டன் கிரீன் டீ எஸ்டேட்டில் கடந்த ஆண்டு பணமதிப்பிழப்பின் போது ஒழிக்கப்பட்ட பழைய நோட்டுகள் பல்லாயிரம் கோடி மாற்றப்பட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த பணம் அங்குள்ள கூட்டுறவு வங்கியில் மாற்றப்பட்டதாம். இதுதொடர்பாக மேலாளர் நடராஜனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இந்த நோட்டுக்களை மாற்றுவதற்கு சசிகலாவுக்கு உதவிய அமைச்சர்களிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. 800 தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ. 2 லட்சம் என ரூ.16 கோடி கருப்பு பணம் மாற்றப்பட்டது கடந்த இரு நாள்களுக்கு முன்பு அதிகாரிகளின் ரெய்டில் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை