எட்டயபுரம் நகர பாரதிய ஜனதா கட்சி செயற்குழு கூட்டம்
எட்டயபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நகர செயற்குழு கூட்டம் கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நகர பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் முத்துவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவில்பட்டி ஒன்றிய தலைவர் ராம்கி முன்னிலை வகித்தார். எட்டயபுரம் நகர தலைவர் நாகராஜன் வரவேற்று பேசினார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சரவணமுத்துகிருஷ்ணன் கலந்துகொண்டு கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது சம்பந்தமாக சிறப்புரையாற்றி கூட்டத்தை வழி நடத்தினார். தொடர்ந்து மோடி தலைமையிலான மத்திய அரசின் மூன்றாண்டு சாதனைகள் குறித்து விளாத்திகுளம் ஒன்றிய பாஜக தலைவர் சக்திகுமார் பேசினார். நகர பொதுச்செயலாளர் சுப்புராஜ், நகர பாஜக. துணைத்தலைவர் செல்வராஜ், கட்சி முழு நேர ஊழியர் மாரியப்பன் மற்றும் நகர பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தொண்டர்களை தொடர்ந்து கொலை செய்திடும் கேரளா கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளால் மரணமடைந்த தேசபக்தர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
செயற்குழு கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1. எட்டயபுரம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடிநீர் இணைப்புகளில் புளோ கண்ட்ரோல் வால்வு பொருத்தும் பணிக்கான செலவு தொகையினை பொதுமக்களிடம் வசூலிக்காமல் பஞ்சாயத்து நிதியிலேயே செய்திட வேண்டும்,
2. எட்டயபுரம் நாவலக்கம்பட்டி ரோட்டில் அமைந்துள்ள சுடுகாட்டில் மழைநீர் செல்லும் வழித்தடத்தில் பேரூராட்சி நிர்வாகத்தால் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி மழைநீர் செல்லும் ஓடையை புதுப்பிக்க வேண்டும், சாக்கடை கழிவுகளால் நாவலக்கம்பட்டி ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரை அகற்றி மயானத்திற்கு செல்லும் பாதையில் சரள் அடிக்க வேண்டும்,
3. பாண்டியன் கண்மாயிலிலிருந்து வெளியேறும் மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டம் உயர வழி செய்யவேண்டும், பாண்டியன் கண்மாய்க்கு செல்லும் பாதையை செப்பனிட வேண்டும்,
4. மேலவாசல் பகுதியிலிருந்து பள்ளி, வங்கி, மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நடுரோட்டு பகுதி முழுவதும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் வாருகால் வசதியுடன் புதிய சாலைகள் அமைத்திட வேண்டும், போன்ற தீர்மானங்கள் இயற்றப்பட்டது.
இளசை லெனின்
கருத்துகள் இல்லை