அப்போ வக்கீல்... இப்போ ரிப்போர்ட்டர்..! - 'ரிச்சி' கதை சொல்லும் ஷ்ரத்தா ஶ்ரீநாத்
சென்னை : கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் வக்கீலாகப் பணிபுரிந்த ஷ்ரத்தா ஶ்ரீநாத் சினிமாவில் களமிறங்கிய பிறகு நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன. 'விக்ரம் வேதா' படத்தில் யாஞ்சி யாஞ்சி என ரசிகர்களைக் கவர்ந்தவர் இப்போது 'ரிச்சி' படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக பத்திரிகை நிருபர் ரோலில் நடிக்கிறார். 'காற்று வெளியிடை', 'இவன் தந்திரன்', 'விக்ரம் வேதா' ஆகிய படங்களில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இதில் 'விக்ரம் வேதா' படத்தில் மாதவனின் மனைவியாக, வக்கீல் வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து, நிவின் பாலிக்கு ஜோடியாக 'ரிச்சி' படத்தில் நடித்திருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இந்தப் படம் டிசம்பர் 8-ம் தேதி திரைக்கு வருகிறது.
இதுபற்றி ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறுகையில், தமிழில் நான் கமிட்டான முதல் படம் 'ரிச்சி'. இரண்டு வருடங்களுக்கு முன்பே கமிட்டாகி நடித்தேன். ஆனால் அந்தப் படம் இப்போதுதான் திரைக்கு வருகிறது. அதையடுத்து நான் நடித்த மூன்று படங்களும் ரிலீசாகி விட்டன. 'விக்ரம் வேதா' படத்தைப்போன்று ரௌடியிசம் கலந்த கதையில் இந்த 'ரிச்சி' படமும் தயாராகியிருக்கிறது. இதில் ஒரு பத்திரிகை நிருபராக நடித்திருக்கிறேன். சில ரௌடிகளை சந்தித்து பேட்டி எடுப்பேன். அப்போது ரௌடியான நிவின் பாலியை சந்திப்பேன். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
அந்த வகையில், விக்ரம் வேதா படத்தை அடுத்து இந்த படத்திலும் ரௌடியிசம் கலந்த கதையில் நடித்திருக்கிறேன். அதனால் அந்த படம் போன்று இந்த படமும் எனக்கு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் எனக் கூறியிருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
கருத்துகள் இல்லை