வடகிழக்குப் பருவமழை தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி கிராமத்தில் தெற்கு மற்றும் வடக்கு என இருபகுதியில் குளம் உள்ளது. நடுப்பகுதியில் கோவில்பட்டி நெடுஞ்சாலை உள்ளது. இன்று பெய்த கனமழையில் தெற்குபகுதியில் உள்ள குளம் நிரம்பியுள்ளது. இதனால் ஊருக்குள் மழைநீர் வருவதற்கான சூழல் ஏற்படுவதை அறிந்த படர்ந்தபுளி கிராம பட்டதாரி இளைஞர்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாது தெற்கு பகுதி நிரம்பிய குளத்திலிருந்து வடக்கில் உள்ள குளத்திற்கு மழைநீர் செல்ல வழிவகுக்கும் விதமாக குளத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பினை சரிசெய்தனர். அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை படித்த இளைஞர்கள் ஒன்றுகூடி செய்திருப்பதால் கிராம மக்கள் பெருமைபடுகின்றனர்.
இளசை லெனின்
கருத்துகள் இல்லை