ஒசூரில் குடியிருப்புப் பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டுயானைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுயானைகளை விரட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒசூர் வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையத் துவங்கி உள்ளன. அங்குள்ள போடூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 60க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் ராமாபுரம் மற்றும் நாயக்கனப்பள்ளி கிராமங்களில் புகுந்து சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டிருந்த நெல், ராகி, காலிபிளவர், பீன்ஸ், கொத்தமல்லி பயிர்களை நாசப்படுத்தின. மேலும் அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் யானைகளால் அச்சமடைந்துள்ள விவசாயிகள், யானைகளை வனப்பகுதிகளுக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை