• சற்று முன்

    தமிழகத்தில் மணல் விலை உயர்வுக்கு திமுகவே காரணம் – முதலமைச்சர் குற்றச்சாட்டு



    தமிழகத்தில் மணல் விலை உயர்வுக்கு திமுகவே காரணம் என தஞ்சாவூரில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    தஞ்சாவூரில் தமிழக அரசின் சார்பில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும், விவசாயிகளை பாதிக்கும் எந்த முயற்சியையும், விவசாயிகள் விரும்பாத எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது எனவும் தெரிவித்தார்.
    தமிழகத்தில் மணல் விலை உயர்வுக்கு திமுக வே காரணம் எனக் கூறிய முதலமைச்சர், தமிழக அரசு மணல் விற்பனையை ஏற்று நடத்தக் கூடாது என தி மு க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததே மணல் விலை உயர்வுக்கு அடிப்படைக் காரணம் என தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad