ஆ.கே.நகரில் வேட்பாளராக மீண்டும் டி.டி. தினகரன் அறிவிப்பு ! தொப்பி சின்னம் கிடைக்குமா ?
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவை பெங்களூரு சிறையில் இன்று சந்தித்தப்பின் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தங்கள் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என்றார்.
அதிமுக அம்மா அணி சார்பில்ல டிடிவி தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அம்மா அணியின் அவைத் தலைவர் அன்பழகன் தலைமையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோதும் டிடிவி தினகரன்தான் அந்த அணி சார்பில் போட்டியிட்டார். அப்போது அவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையிலும் பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கியதால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை