கோவில்பட்டியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன் முற்றுக்கை ஆர்ப்பாட்டம் !
கோவில்பட்டி அருகேயுள்ள இடைச்செவல் கிராமத்தில் தனியார் கேபிள் நிறுவனம் மூலமாக கேபிள் சேவை கொடுக்கப்பட்டு வந்துள்ளனர். அந்த தனியார் நிறுவனம் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தினை விட அதிக கட்டணம் வசூல் செய்ததாகவும், தெளிவான சேவை இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தற்போது இடைச்செவல் கிராமத்தில் கேபிள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு செட்டப் பாக்ஸ் குறித்து தவறான தகவல் பரப்புவது மட்டுமின்றி, இடைச்செவல் கிராமத்திற்கு அரசு கேபிள் சேவை பெற முயற்சி எடுக்கும் தனிநபர் மீதும், தங்கள் கிராமம் பற்றியும், உள்ளுர் தொலைக்காட்சியில் அவதூறான தகவல்கள் கூறப்பட்டுவருவதாகவும், எனவே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கிராமத்தை சேர்ந்த ராஜகுரு மற்றும் வழக்கறிஞர் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோட்டாட்சியர் அனிதாவிடம் தங்களது கோரிக்கை மனுவினையும் அளித்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் அரசு கேபிள் டிவி தனி தாசில்தார் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இளசை ..லெனின்
இளசை ..லெனின்
கருத்துகள் இல்லை