Header Ads

  • சற்று முன்

    மழை வெள்ளத்தை புனரமைக்க ரூ. 1500 கோடி நிவாரணநிதி - மோடியிடம் கேட்ட முதல்வர்


    சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளச்சேதம் பற்றி பிரதமரிடம் விளக்கியதாகவும், சீரமைக்க ரூ. 1500 கோடி நிதி கேட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மழை வெள்ள சேதம் பற்றி 30 நிமிடங்கள் கேட்டறிந்தார். மழை வெள்ள சேதத்திற்கு ரூ.1500 கோடி நிதி கேட்டிருக்கிறோம்.
    மழை வெள்ளத்திற்கு நிவாரண நிதி அளிப்பதாக மோடி உறுதி அளித்துள்ளார் அவருக்கு நன்றி என்று கூறினார். டெங்குகாய்ச்சல் வேறு, மழை வெள்ள சேதம் வேறு என்று கூறிய முதல்வர், வெள்ள நீர் படிப்படியாக அதிகரிக்கப்படுவதாக கூறினார். வயல்களிலும், ஏரிகளிலும் வீடு கட்டியதால்தான் மழை வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதாக கூறினார் முதல்வர். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரினை படிப்படியாகத்தான் அகற்ற முடியும். உள்ளாட்சி தேர்தல் பற்றிய வழக்கு நடைபெற்று வருகிறது. வழக்கில் தீர்ப்பு வந்த பின்னர்தான் தேர்தல் நடைபெறும். என்றும் கூட்டணி பற்றி சட்டசபை தேர்தல் வரும்போதுதான் பேச முடியும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad