எட்டயபுரத்தில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டு தொகை அனைத்து வகையான பயிர்களுக்கும் உடனடியாக வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய மதிமுக சார்பில் எட்டயபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலர் விநாயகா ஜி. ரமேஷ், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய மதிமுக செயலர் கோ. கார்த்திகேயன், கோவில்பட்டி நகர மதிமுக செயலர் எஸ். பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மதிமுக மாநில கொள்கை விளக்க அணி செயலர் பொடா க. அழகுசுந்தரம் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டு தொகை அனைத்து வகையான பயிர்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும். பழுதடைந்த நிலையில் உள்ள அனைத்து கிராமப்புற சாலைகளையும் சீரமைக்க வேண்டும். கிராமங்களில் முழுமையான அளவில் அடிப்படை சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். எட்டயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீர்நிலை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மதிமுக நிர்வாகிகள் ஆர். காளிதாஸ், அ. வரதராஜன், சிவக்குமார், பவுன்மாரியப்பன், தராசு மகாராஜன், பொன் ஸ்ரீராம், அழகர்சாமி மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். . . .
இளசை லெனின்
கருத்துகள் இல்லை