கோவில்பட்டியில் நகராட்சின் மெத்தன போக்கை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்பாட்டம்
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டு லெட்சுமி தியேட்டர் மற்றும் டால்துறை பங்காள தெருவில் 200க்கும்மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ளவர்கள் திறந்த வெளியில் குப்பை கொட்டுவதலும், லெட்சுமிதியேட்டர் பகுதியில் ஆண்கள் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் அவல நிலை உள்ளதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடுநிலவுகிறது. மேலும் கொசு தொல்லை அதிகரித்து வருவதால் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் நகராட்சி நிர்வாகம்உடனடியாக இப்பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்திஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் லெட்சுமி தியேட்டர் அருகே மாதர் சங்கத்தின் நகர தலைவர்விஜயலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களைஎழுப்பினர். இதனை தொடர்ந்து மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் விநாயகம் தலைமையிலான காவல்துறையினர் போராட்டத்தில்ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முறையாக நகராட்சி நிர்வாகத்தியிடம் மனு அளிக்கவும், அதன் பிறகு நகராட்சிநடவடிக்கை மேற்கொள்ளும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இளசை ..லெனின்
இளசை ..லெனின்
கருத்துகள் இல்லை