Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே பரபரப்பு அரசு பஸ் சிறைப்பிடிப்பு :

    கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிராமம் வில்லிசேரி. சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் இந்த கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்பசுகாதார நிலையம் மற்றும் கால்நடை மருந்தகம் உள்ளிட்டவை இயக்கி வருகின்றனர். மேலும் அதிகளவு விவசாயிகளை கொண்ட பகுதி. வில்லிசேரி கிராமத்திற்கு கோவில்பட்டியில் இருந்த அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் வில்லிசேரி அருகேயுள்ள அகிலாண்டபுரம் வரை சென்று மீண்டும் வில்லிசேரி வழியாக கோவில்பட்டிக்கு சென்று வருகிறது.

    இந்நிலையில் இந்த பஸ் கயத்தார் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. இதனால் அரசு பஸ் சரியான நேரத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக காலை 9மணிக்கும் வரவேண்டிய பஸ் 9.40 மணிக்கு வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், விவசாயிகள், கூலி தொழிலாளர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த நேரத்தில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கிராம மக்கள், பாரதிய கிசான் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சேசுநாயக்கர், மாவட்ட தலைவர் ரெங்கநாயகலு மற்றும் மாவட்ட துணை தலைவர் பரமேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இன்று காலையில் வில்லிசேரிக்கு வந்த அரசு பஸ்சினை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இது குறித்து தகவல் கிடைத்தும், போலீசார் மற்றும் அரசு போக்கவரத்து கழக அலுவலர்கள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வழக்கமான நேரத்தில் பஸ் இயக்கப்படும் என்று உறுதியளித்தை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
                                                                                                                        - இளசை மு.‍லெனின்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad