கோவில்பட்டியில் பள்ளி மாணவ –மாணவிகளுக்கான சாலை விழிப்புணர்வு ஓவிய போட்டி
கோவில்பட்டியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சாலை விழிப்புணர்வு ஓவிய போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தனர். 3 பிரிவுகளாக நடைபெற்ற இந்த ஓவிய போட்டியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சாலை விழிப்புணர்வு குறித்த ஓவியங்களை ஆர்வமுடன் வரைந்து அசத்தினர்.
தொடர்ந்து பரிசளிப்பு விழா கோவில்பட்டி டி.எஸ்.பி.முருகவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட எஸ்.பி.மகேந்திரன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளின் ஓவியங்களை பார்வையிட்டார். தொடர்ந்து சிறந்த ஓவியம் வரைந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் காவல்துறை ஆய்வாளர்கள் பவுல்ராஜ், விநாயகம் மற்றும் உதவி ஆய்வாளர்கள், போக்குவரத்து காவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இளசை மு.லெனின்
கருத்துகள் இல்லை