Header Ads

  • சற்று முன்

    சென்னையில் இடியுடன் கூடிய கன மழை வானிலை மையம் எச்சிரிக்கை

    சென்னை: மன்னார் வளைகுடா வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புண்டு என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
    சென்னையில் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
    சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பாலச்சந்திரன், இலங்கைக்கு அருகே இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடல் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி ஆந்திரா வரை நீடிப்பதாக கூறினார்.
    மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும்
    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் விட்டுவிட்டு மழை பெய்யும், ஒருசில வேளையில் கனத்த மழை பெய்யும்.
    கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனத்த மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
    சென்னையில் 24 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனத்த மழை விட்டு விட்டு பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
    சென்னையில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 93 சதவிகிதம் அதிகம் பெய்துள்ளதாகவும் கூறினார். தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை 19 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad