• சற்று முன்

    நடிகை அசினுக்கு பெண் குழந்தை பிறந்தது!

    நடிகை அசினுக்கு பெண் குழந்தை பிறந்தது!

    புதுடெல்லி: நடிகை அசின் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மா ஜோடிக்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்தது.

    மலையாளம், தெலுங்கு திரை உலகில் ஒருசில படங்களில் நடித்த அசின், தமிழில் கடந்த 2004ல் வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமானார். பின் விஜய்யுடன் சிவகாசி,போக்கிரி, அஜீத்துடன் வரலாறு, உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், சூர்யாவுடன் நடித்த கஜினி படத்தின் இந்தி ரீமேக் படத்திலும் நடித்து இந்தி திரை உலகிலும் பிரபலமானார்.இந்நிலையில் நடிகை அசினுக்கும், மைக்ரோமேக்ஸ் நிறுவனரான ராகுல் சர்மாவுக்கும் டெல்லியில் கடந்த 2016 ஜனவரியில் திருமணம் நடந்தது. கிறிஸ்துவ முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடந்தது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad