Header Ads

  • சற்று முன்

    மெர்சலை பழிதீர்க்க கிளம்பிய மருத்துவர்கள்: சமூக வலைதளத்தில் படத்தை பகிர்ந்து எதிர்ப்பு!

    மெர்சலை பழிதீர்க்க கிளம்பிய மருத்துவர்கள்: சமூக வலைதளத்தில் படத்தை பகிர்ந்து எதிர்ப்பு!

    Image result for mercelசென்னை: மெர்சல் படத்துக்கு கிளம்பிள்ள எதிர்ப்பு பட்டியலில் தற்போது மருத்துவர்களும் இணைந்துள்ளனர்.

    தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உலகம் முழுவதும் மெர்சல் படம் வெளிவந்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படம் கலவையான விமர்சனங்கள் சந்தித்து வந்த போதும் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது.

    இந்நிலையில் ஜி.எஸ்.டி குறித்த வசனம், அரசியல் தாக்கு, உள்ளிட்ட காரணத்தால் ஏற்கனவே இப்படம் வெளியான பின்பும் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. தற்போது இப்பட்டியலில் மருத்துவர்களும் சேர்ந்துள்ளனர்.

    இப்படத்தில் மருத்துவத்துறை வெறும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்துக்கு எதிராக மருத்துவர்கள் தங்களது எதிர்ப்பை காட்ட துவங்கியுள்ளனர். இதனால் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியான இப்படத்தை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad