மதுக்கடைகளில் பெண்களை பணிக்கு நியமிக்கலாம் – கேரளா உயா்நீதிமன்றம் உத்தரவு
மதுக்கடைகளில் பெண்களை பணிக்கு நியமிக்கலாம் – கேரளா உயா்நீதிமன்றம் உத்தரவு
மதுக்கடைகளில் பெண்களை பணிக்கு நியமிக்கலாம் – கேரளா உயா்நீதிமன்றம் உத்தரவு

கேரளா மாநில அரசின் மது விற்பனை கழகம் மற்றும் இதர அமைப்புகளின் கீழ் செயல்படும் மது விற்பனை கடைகளில் ஆண்கள் மட்டும் பணியாற்றி வந்தனா். பெண்களுக்கு மது விற்பனை கழகத்தின் நிா்வாக அலுவலகத்தில் அலுவலக உதவியாளா் மட்டத்தில் மட்டுமே பணிகள் ஒதுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், அரசின் மது விற்பனை கடைகளிலும் ஆண்களுடன் இழணந்து பெண்களும் பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காதது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய சமத்துவ உாிமையை மீறும் செயலாகும். ஆதலால் தங்களுக்கு மதுக்கடைகளில் பணி ஒதுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பெண்கள் சாா்பில் கேரளா உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அந்த மனு உயா்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், கேரளாவில் மாநில அரசு சாா்பில் நடத்தப்படும் மது விற்பனை கடைகளில் ஆண்களுடன் இணைந்து பணியாற்ற பெண்களுக்கு தடையில்லை. அவா்களுக்கு பணி வழங்கலாம் என்று உத்தரவிட்டது
கருத்துகள் இல்லை