பேரழகன், மொழி, சந்திரமுகி.. கலக்கல் நடிப்புக்கு பெயர்போன க்யூட் ஜோ!
பேரழகன், மொழி, சந்திரமுகி.. கலக்கல் நடிப்புக்கு பெயர்போன க்யூட் ஜோ!
வாலி படத்தில்
முன்னணி நடிகை ஜோதிகா,
வித்தியாசமான பாத்திரங்கள்
முன்னனி நடிகை என்பதற்காக ரசிகர்கள் விரும்பும் அழகுப் பதுமையாகவே நடித்துவிட்டுப் போகவில்லை ஜோதிகா. 'பேரழகன்' படத்தில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்தார். 'மொழி' படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்தார். சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே, நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் நடித்தார்.
விருதுகள் 'சந்திரமுகி'
படத்திற்காக தமிழக அரசின் விருதைப் பெற்றிருக்கிறார் ஜோதிகா. 'கங்கா சந்திரமுகியா தன்னை நினைச்சுக்கிட்டா... கங்கா சந்திரமுகியாவே மாறினா...' எனும் வசனம் அவரது நடிப்பிற்குக் கிடைத்த சன்மானமாகவே கொள்ளலாம். மூன்று முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், மூன்று முறை தமிழக அரசின் விருதுகளையும் பெற்றுள்ள நடிகை ஜோதிகா, கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.
சூப்பர் ஜோடி
சூப்பர் ஜோடி

36 வயதினிலே
குடும்பத் தலைவியாக சீரும் சிறப்புமாகச் செயல்பட்ட ஜோ, மீண்டும் தனது 36 வயதில் '35 வயதினிலே' படத்தின் மூலம் சினிமா உலகில் ரி-என்ட்ரி கொடுத்தார். குடும்பப் பாரங்கள் அழுத்தும் ஒரு சராசரிப் பெண், அவற்றிலிருந்து எப்படி விடுதலையாகிறார் என்பதுதான் கதை. இந்தக் கேரக்டரில் நடித்த ஜோதிகாவை தங்களின் முகமாகவே பார்த்தார்கள் தமிழகத்துப் பெண்கள்.
பெண்களின் ஐகான் ஜோதிகாவின் ரீ- என்ட்ரியில் அடுத்த படமாக வந்த 'மகளிர் மட்டும்' பலத்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது. தனது வயதுக்கு ஏற்ற கேரக்டர்களாகத் தேர்ந்தெடுத்து நடிப்பில் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கிவிட்டார் ஜோதிகா. பாலா இயக்கத்தில் 'நாச்சியார்' படம், மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் என இப்போதும் ஜோ செம பிஸி. முற்போக்கை விரும்பும் பெண்களின் ஐகானாக விளங்கும் ஜோ-வுக்கு ஹேப்பி பர்த்ட..!

கருத்துகள் இல்லை