சமந்தா கணவரின் படத்தில் முக்கிய வேடத்தில்
ஐதராபாத் : திருமணத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக சினிமா, சீரியல் என்று நடித்து வந்த நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு 'பாகுபலி', 'பாகுபலி-2' படங்களுக்குப்பிறகு மார்க்கெட் சூடுபிடித்தது.
தற்போது கமலின் 'சபாஷ் நாயுடு' சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் தெலுங்கில் 'பால கிருஷ்ணுடு' உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
சைலஜா ரெட்டி அல்லுடு' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன். சமீபத்தில் நடிகை சமந்தாவை திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
இந்தப் படம் காமெடி கலந்த கதையில் உருவாகிறது. இந்தப் படத்தில் 'சைலஜா ரெட்டி' எனும் முக்கிய ரோலில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறாராம். அதனால் அவரைச்சுற்றியே மொத்த கதையும் பின்னப்பட்டிருக்கிறதாம். தெலுங்கில் சிவகாமி தேவிக்கு ராஜயோகம்தான்.
கருத்துகள் இல்லை