• சற்று முன்

    7 சவரன் தங்க சங்கலி மீட்பு பொது மக்கள் பாராட்டு


    ஊன மாஞ்சேரியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் திருமதி லெபனான், மெர்சல் தேவசெல்வி வயது 51 இவர் பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தபோது வண்டலூர் ரயில்வே பாலம் அருகே முகம் கவசம் அணிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை வழிமறித்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டனர் குற்றவாளி சுமார் 7 சவரன் எடையுள்ள தங்கச் சங்கிலி  பறித்துக்கொண்டு ரயில் தண்டவாளம் வழியாக தப்பிச் சென்றா. புகாரின் அடிப்படையில் டி7 ஓட்டேரி காவல் நிலையத்தில் குற்ற எண் 22 /2026 இல் சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது 

    தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் படி தாம்பரம் மாவட்ட காவல்துறை ஆணையர் அவர்களின் மேற்பார்வையிலும் டி7 ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு ஆல்பன்ராஜ் தலைமையில் குற்றவாளியை கைது செய்து திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையின் போது தனிப்படையின சிசிடிவி கேமரா பதிவுகள் பொது போக்குவரத்து விவரங்கள் மற்றும் பிற தொழில்நுட்ப ஆதாரங்களின் மூலம் சந்தேக நபரின்  நடத்தை துல்லியமாகக் கண்டறிந்தனர். விசாரணையில் முகக் கவசம் அணிந்திருந்த சந்தேக நபர் முடிச்சூரிலிருந்து நடந்து வந்து முடிச்சூர் சாலை நடேசன் பள்ளி பேருந்து நிலையத்தில் சுமார் மதியம் ஒரு மணி அளவில் பேருந்து ஏரியும் u p  i  மூலம் பேருந்து பயணச்சீட்டு வாங்கியதும் தெரிய வந்தது. அவர் மதியம் சுமார் 1:45 மணி அளவில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இறங்கினார் பின்னர் தாம்பரம் ரயில் நிலையத்திற்குச் சென்று அங்கு சுமார் இரண்டு 45 மணி வரை இருந்தார் அதன் பிறகு வண்டலூர் ரயில் நிலையம் நோக்கிச் சென்று சுமார் 3 மணி அளவில் அங்கு சென்று அடைந்தார் சங்கிலிப் பறிப்பு சம்பவம் மாலை சுமார் நான்கு 52 மணி அளவில் வண்டலூர் ரயில்வே பாலம் அருகே நடைபெற்றது குற்றத்தை செய்த பின்னர் குற்றவாளி அப்பகுதியில் இருந்து வெளியேறி விருதுநகருக்குச் சென்றுள்ளார் தனிப்பட்ட மேற்கொண்ட தீவிர விசாரணை என்ற மூலம் சந்தேகக்கும் நபரின் மதியம் ஒன்னு முதல்  ஏழு மணி அளவில் மாலை 7 மணி வரையிலான நடமாற்றத்தை விரிவான விசாரணையின் மூலம் கண்டறிந்து உறுதி செய்தனர். பேருந்துகள் ரயில் நிலையங்கள் மற்றும் பிற இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 40 சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டனர் பேருந்துகள் மற்றும் ரயில் நிலையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகள் பயணிச்சிட்டு பரிவர்த்தனை விவரங்கள் மொபைல் போன் பரிவர்த்தனை பதிவுகள் வங்கி பரிவர்த்தனைகளை விவரங்கள் மற்றும் பிற தொழில்நுட்ப ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.


    மேலும் cdr அறிக்கையில் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது தொடர்ச்சியாக பின்தொடர்கள் நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப ஆய்வின் அடிப்படையில் தனிப்படினர் சந்தேக நபர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த குற்றவாளி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் கார்த்திக் ராஜ் வயது 29 என்பதை அடையாளம் கண்டனர் இதனை அடுத்து குற்றவாளியை விருதுநகரில் இருந்து தனிப்பட்டால் கைது செய்யப்பட்டார்.  

    விசாரணையின் போது சங்கிலி பறிப்பு குற்றத்தில் தான் ஈடுபட்டது அவர் ஒப்புக்கொண்டார் அவரிடம் இருந்து திருடப்பட்ட தங்கள் சொத்து மீட்கப்பட்டது சிறப்பு படையினரின் ஒருங்கிணைந்த முயற்சிகள் விடாமுயற்சியுடன் மேற்கொண்ட விசாரணை விரிவான சிசிடிவி ஆய்வு மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை சேகரித்ததன் மூலம் இவ்வழக்கு கண்டுபிடிக்கப்பட்டு திருடப்பட்ட சொத்து மீட்கப்பட்டது காவல்துறை தலைமை இயக்குனர் படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் அவர்கள் தாம்பரம் மாநகர ஆணையத் திரு பிரேம் ஆனந்த் சிங்கா ஐபிஎஸ் அவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தனிப்படையினரின் சிறப்பான பணியை வெகுவாக பாராட்டினார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad