• சற்று முன்

    காஞ்சிபுரத்தில் ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிராண்ட் சார்பில், உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.


    காஞ்சிபுரத்தில் ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிராண்ட் சார்பில், ரொட்டேரியன் நிர்வாக செயலாளர் முருகேஷ் அவர்களின் ஏற்பாட்டில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. 


    காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் பெருமக்களான வனத்துறை அமைச்சர் ஆர்.வி. இரஞ்சித் குமார் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர். 


    இந்த உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி பள்ளி குழந்தைகளின் ஸ்கேட்டிங் மற்றும் சிலம்பாட்ட கலை நிகழ்ச்சிகளுடன் புறப்பட்டு காமராஜர் சாலை, மேட்டு தெரு, கீரை மண்டபம், காவலான் கேட் வழியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது.

    இந்தப் பேரணியில் அமைச்சர்கள் நடை பயணமாக சென்று உடல் உறுப்பு தான விழிப்புணர்வை ஊக்கப்படுத்தியதுடன் இதில் கலந்து கொண்ட தன்னார்வலர்களையும் உற்சாகப்படுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து ரோட்டரி கிளப் ஆப் காஞ்சிபுரம் கிரண்ட் சார்பில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் பெருமக்கள் மற்றும் பிரம்மிங் பள்ளி  தாளாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு சால்வை அணிவித்து கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.  இதேபோன்று சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வி என்ற அம்மையாருக்கு உடல் உறுப்பு தானம் செய்ததற்கான பத்திரத்தினை வழங்கி சால்வை அணிவித்து ரொட்டேரியன் முருகேஷ் அவர்கள் கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில், எஸ்.எஸ்.கே .வி, சங்கரா, PT lee  செங்கல்வராயன், சென் ஜோசப் உள்ளிட்ட பல முக்கிய கல்லூரி மாணவ மாணவியர்கள், மாணவியர்களின் பெற்றோர்கள், தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

    நிகழ்ச்சியின் முடிவினில் காவல்துறையினர் மற்றும் ஊடகத்துறையினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad