• சற்று முன்

    பூசிவாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள், வினை தீர்க்கும் விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா


    பூசிவாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள், வினை தீர்க்கும் விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்........

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் பூசிவாக்கம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள், வினை தீர்க்கும் விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் ஆலய குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் ஒன்றிணைந்து புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா ஏற்பாடு செய்தனர். 


    இந்த நிலையில் புதன் கிழமையான நேற்று காலை ஸ்ரீ மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம் முதலிய முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.  அதனைத்தொடர்ந்து இன்று காலை மங்கல இசை, கோபூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பல்வேறு புனித நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் கோவிலை சுற்றி வந்து விமான கும்பாபிஷேகமும், வினை தீர்க்கும் விநாயகர் கும்பாபிஷேகம், வெங்கடேச பெருமாள் கும்பாபிஷேகமும் மாரியம்மன் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்று ஏராளமான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். 

    இந்த கும்பாபிஷேக விழாவை ஆலய விழா குழுவினர் வெங்கடேசன், தமிழரசு,பாரி,வேலு குமரேசன், விநாயகமூர்த்தி ஜே.பெருமாள், தங்கராஜ்,திருப்பதி, மணி, புகழேந்தி சத்தியமூர்த்தி வினோத், விக்ரம், குமரவேல், எஸ்.பெருமாள், மனோஜ், அஜய், கணபதி,பெருமாள் உள்ளிட்டோருடன் பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் சிறப்பாக விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad