காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு முன்னாள் அமைச்சர் ஆர். காந்தி பிறந்த நாள் முன்னிட்டு ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கினார்.
காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவிலில் இராணிப்பேட்டை திமுக மாவட்ட செயலாளர், காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு முன்னாள் அமைச்சர் ஆர்.காந்தி பிறந்தநாள் முன்னிட்டு தனது குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு செய்து அன்னதானம் வழங்கினார். இதையடுத்து புதுப்பிக்கப்பட்ட ஆயிரம் கால் மண்டபத்திற்கு தனது சொந்த செலவில் ரூபாய் ஆறு லட்சம் மதிப்பீட்டில் சோடியம் விளக்கு அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஆர். காந்தி கூறுகையில்,
சட்ட மன்றத்தில் அதிக கேள்வி எழுப்புகின்ற முன்னாள் அமைச்சர் கே.என். நேரு அவர்களை அச்சுறுத்த தான் லஞ்ச ஒழிப்பு சோதனைகளை நடத்தி வருகின்றனர். நீண்ட நாட்கள் கோரிக்கைகளை ரீல் தளபதி இல்லை ரியல் தளபதி ஆட்சி காலத்தில் இருந்து கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை, இப்போது சட்ட மன்ற கூட்டம் போலவா நடக்கிறது,
110 நாட்கள் தவெக ஆட்சி ரீல் ஆட்சி தான் நடக்கிறது, திமுக திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி நடக்கிறது,
ராணிப்பேட்டை மாவட்டதில் JK டயர் தொழிற்சாலை இருப்பதாக சட்ட மன்ற உறுப்பினருக்கு தான் தெரியவில்லை என்றால் தொழில்துறை அமைச்சருக்கு தெரியவில்லை அப்படிப்பட்ட ஆட்சி தான் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில் லாபத்தில் சென்ற கோஆப் டெக்ஸ் கைத்தறி துறையில் தவெக ஆட்சியில் 6 மூடுவிழா கண்டது தான் சாதனை என காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவிலில் 1000 கால் மண்டபத்தில் சொந்த செலவில் 6 மதிப்பில் புதியதாக விளக்கு அமைக்கும் பணி பார்வையிட்ட பின் செய்தியாளர்களை முன்னாள் அமைச்சர் காந்தி பேட்டி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர்
க.சுந்தர், மாநகர செயலாளர் சி.கே.வி.தமிழ்செல்வன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி எஸ் ராமகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார், மாநகர மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், படுநெல்லி பி.எம். பாபு, கருப்படிதட்டடை ஊராட்சி மன்ற தலைவர் பொன்னா வெங்கடேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.






கருத்துகள் இல்லை