• சற்று முன்

    முதுகுத் தண்டுவடப் பாதிப்பு தினம் விழிப்புணர்வுப் பேரணி



    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா முதுகுத் தண்டுவடப் பாதிப்பு தினம் விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இப்பேரணியில் தண்டுவடக் காயம் அடைந்தோர் அமைப்பை (Spinal Injured Persons Associations SIPA) சார்ந்த 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், காஞ்சிபுரம் செவிலியர் மற்றும் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பேரணி சென்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு சக்கரம், நான்கு சக்கரம் வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் சாலைகளில் செல்பவர்கள் முறையான

    சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்திட சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.மலர்விழி, செயிண்ட் மேரி கல்லூரி முதல்வர் மேரி டெய்சி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad