• சற்று முன்

    அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் நெல்மணிகளை குவியல் குவியலாக கொட்டி வைத்து காத்திருக்கும் விவசாயிகள்.



    காஞ்சிபுரம் மாவட்டத்தில்அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் நெல்மணிகளை குவியல் குவியலாக கொட்டி வைத்து காத்திருக்கும் விவசாயிகள்.

    இரு நாட்களாக மழை பெய்து வருவதால், நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகிவிடும் விடும்  அச்சத்தில், உள்ள விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து நெல்லை கொள்முதல் செய்ய கோரிக்கை.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உத்திரமேரூர், சாலவாக்கம், களக்காட்டூர், விச்சாந்தாங்கல், காலூர், மேல்பெரமநல்லூர், வேடல், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள்,அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய வளாகங்களிலும், திறந்தவெளியிலும் குவித்து  வைத்து, அரசு நெல் கொள்முதல் நிலையம் எப்போது திறப்பார்கள் என காத்துக் கிடக்கின்றனர். 



    இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் நெல் குவியல்கள் மழையில் நனைந்து பாழாகி விடுமே என்ற அச்சத்தில் வேதனை அடைந்து வருகின்றனர்.

    கொட்டி வைத்துள்ளநெல் குவியல்கள் மழையில் நனைந்து சேதமடைவதைத் தடுக்கும் வகையில், விவசாயிகள் இரவு பகலாக தார்ப்பாய்களைக் கொண்டு மூடி பாதுகாத்து வருகின்றனர்.



    அதனால் தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து  நெல்மணிகளை கொள்முதல் செய்து, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காத்துக் கிடக்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad