50 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கம்மவான்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நெகிழ்ச்சியான மறு சந்திப்பு விழா
கம்மவான்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 1975–76ஆம் ஆண்டு பள்ளி இறுதி வகுப்பு (Old SSLC) பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் குடும்பத்தினருடன் ஒன்று கூடி, பழைய நண்பர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்களை சந்திக்கும் மறு சந்திப்பு (Re-union) விழா 06.09.2026 இன்று சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர், கழக கொள்கை பரப்பு இணைச் செயலாளர், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் திரு. S.M. சுகுமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் கம்மவான்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா முருகன், ஒன்றிய மாவட்ட பிரதிநிதி அருள், முன்னாள் தலைமை ஆசிரியர் P. ஸ்டான்லி, தலைமை ஆசிரியர் K. கோவிந்தராஜன், ஊர் பெரியவர்கள் A. தவமணி, N. விஸ்வநாதன், G. அமானுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
50 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சந்தித்து, பள்ளிப் பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டது அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.






கருத்துகள் இல்லை