• சற்று முன்

    ஆற்காடு அருகே மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி


    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், ஹிட்டோஷி ஷிட்டோ-ரியூ கராத்தே-டோ இந்தியா சங்கம் சார்பில் 2026-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.


    இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஜூனியர், சப்-ஜூனியர் மற்றும் சீனியர் என பல்வேறு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என 400-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தனபால் தலைமை வகித்தார். மற்றொரு சிறப்பு அழைப்பாளரான முனிராஜ் முன்னிலை வகித்தார்.



    மேலும், முக்கிய சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற செண்பகராஜ் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர், போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டி, ஊக்கப்படுத்தினர்.

    இந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள், அடுத்தகட்டமாக இந்திய அளவில் நடைபெறும் கராத்தே போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்படுகின்றனர்.

    நிகழ்ச்சியில் சர்வதேச தலைமை நடுவரான மணிவண்ணன் நடுவராக பங்கேற்று போட்டிகளை நடத்தினார். நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் மற்றும் பல்வேறு கராத்தே பயிற்சி பள்ளிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

     ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad