• சற்று முன்

    நேபாள வெள்ளத்தில் சிக்கியிருக்கிறார்களா? – காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 6 சுற்றுலாப் பயணிகளின் நிலை குறித்து உறவினர்கள் கவலை



    நேபாள வெள்ளத்தில் சிக்கியிருக்கிறார்களா? – காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 6 சுற்றுலாப் பயணிகளின் நிலை குறித்து உறவினர்கள் கவலை 6பேரினை தொடர்பு கொள்ளாமல் முடியாமல் தவித்து வருவதால் மாவட்ட ஆட்சியரிடம் அவர்களின் நிலை குறித்தும்,கண்டுபிடித்து தருமாறும் உறவினர்கள் மனு அளிப்பு

    காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 6 பேர், குரோம்பேட்டை மகாதேவி யாத்ரா நிறுவனம் மூலம் கடந்த 14ஆம் தேதி 14 நாட்கள் கைலாஷ் என்ற ஆன்மீக சுற்றுலாவாக நேபாளம் சென்றுள்ளனர்.

    காஞ்சிபுரம் புஞ்சையரசந்தாங்கல்,கணிகண்டீஸ்வரர் கோயில் தெரு, பிள்ளையார்பாளையம் ,மின் நகர் உள்ளிட்ட பிற பகுதிகளிலிருந்து காஞ்சிபுரத்தை சேர்ந்த  சந்திரன், அருட்செல்வன்,  லதாபானுமதி, மினாட்சி, சர்ஸ்வதி, கோபால் ஆகிய

    6பேர் உட்பட சுமார் 49நபர்கள் இந்த ஆன்மிக சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர்.

    இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சுற்றுலா வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளதால், அங்கு சென்றுள்ள 6 பேரின் நிலை குறித்து அவர்களது உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    சுற்றுலாப் பயணிகளின் தற்போதைய நிலை குறித்து தமிழக அரசு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த டூரிஸ்ட் ஏஜென்ட் மூலமாக தமிழகத்தைச் சார்ந்த 49 நபர்கள் சென்றுள்ளார்கள் என சுற்றுலா நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

    மேலும் இவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் இந்த 6பேரின் நிலைமை என்ன என்று தெரியாமல் மிகுந்த அச்சமடைந்துள்ள அவர்களது உறவினர்கள்  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சினேகாவிடம் அவர்களின் நிலைமை குறித்த தகவல்களை அளிக்கவும்,அவர்களை கண்டுபிடித்து தருமாறும் மனு அளித்துள்ளனர். கடைசியாக நேற்று காலை போன் மூலம் பேசியுள்ள நிலையில் அவர்களின் செல்போன் எண்கள் சுட்ச் ஆப் என்று வருவதாகவும், இன்று மாலை அவர்கள் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களின் நிலைமை குறித்து எவ்வித தகவல்களும் இல்லாததால் பெரும் சோகத்தில் அவர்களின் உறவினர்கள் நிற்கதியாக தவித்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad