காஞ்சிபுரம் மாவட்டம் 2011 ஆம் ஆண்டு காக்கி உதவும் கரங்களின் 54வது பங்களிப்பு
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் காவலராக தேர்வாகி, தாம்பரம் பெருநகர காவல், குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவில் பணிபுரிந்து வந்த நமது 2011 பேட்ச் காவலர், தெய்வத்திரு. R. ராஜா, HC 1837 அவர்கள் கடந்த 09.09.2025 அன்று காலமானார்.
அன்னாரது குடும்பத்திற்கு உதவும் வகையில், 2011 பேட்ச் “காக்கி உதவும் கரங்கள்” சார்பாக பெறப்பட்ட உதவித் தொகையிலிருந்து, மறைந்த தெய்வத்திரு. R. ராஜா அவர்களின் இரண்டு பெண் குழந்தைகளான ரக்ஷ்னா (10) மற்றும் வர்சிகாசாய் (6) ஆகியோருக்கு அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டத்தில் தலா ரூ.10,00,000/-, மொத்தம் ரூ.20,00,000/- முதலீடு செய்யப்பட்டது.
மேலும், அன்னாரது தாயார் திருமதி. ரங்கம்மாள் மற்றும் மனைவி திருமதி. ராதிகா ஆகியோருக்கு அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டத்தில் தலா ரூ.3,00,000/-, மொத்தம் ரூ.6,00,000/- முதலீடு செய்யப்பட்டது. அத்துடன், தாயார் மற்றும் மனைவி ஆகிய இருவருக்கும் தலா ரூ.7,500/- வீதம் ரொக்கமாக வழங்கப்பட்டது.
மேற்கண்டவாறு மொத்தம் ரூ.26,15,000/- மதிப்பிலான உதவியும், சிறுசேமிப்பு திட்ட முகவர் திருமதி J. லட்சுமி அவர்கள் சார்பாக அன்னாரது இரண்டு மகள்களுக்கும் ரூ.6,500/- உதவித் தொகையும் வழங்கப்பட்டது.
இவ்வுதவித் தொகைகள் அனைத்தும் காஞ்சிபுரம் சரக காவல் துணைத் தலைவர் உயர்திரு. G. சஷாங் சாய், IPS மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. S. அரவிந்த், IPS ஆகியோர் முன்னிலையில், இன்று 27.08.2026 காலை 11.00 மணியளவில், காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வழங்கப்பட்டன.
“காக்கி உதவும் கரங்கள்” மூலம் காவலர் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இப்பங்களிப்பு, காவல்துறையினரின் சகோதரத்துவத்தையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.






கருத்துகள் இல்லை