காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று சமரச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த சமரச விழிப்புணர்வு முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி திரு. நாகராஜன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி திரு.எஸ். நாகராஜன் அவர்கள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு சிவில் வழக்குகள், பாக வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நீதிமன்ற வழக்குகள், விபத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள் உள்ளிட்ட 10 கும் மேற்பட்ட வழக்குகளை மக்கள் தாங்கலாகவே தீர்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும், இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உள்ளது எனவும், இதை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களுக்காகவே சிறப்பு அமர்வுகள் அமர்த்தப்பட்டுள்ளது எனவும், மாவட்ட நீதிமன்றத்தின் சார்பிலும் வழக்கறிஞர்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன் என காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி திரு.எஸ். நாகராஜ் அவர்கள் தெரிவித்தார். இந்த சமரச விழிப்புணர்வு முகாமில் மாவட்ட கூடுதல் நீதிபதி மோகன குமாரி, தலைமை அலுவலர் தொழிலாளர் நீதிமன்றம் சுஜாதா, மாவட்ட சிறப்பு நீதிபதி பாண்டியராஜ், முதன்மை துணை நீதிபதி மோகனா, கூடுதல் துணை நீதிபதி முகமது அலி, மாவட்ட முதன்மை முன் சிப் ஃபண்ணி ராஜன், கூடுதல் மாவட்ட முன்சீப் சந்தியா தேவி, சக்தி மகேஷ் குமார், நவீன் துரை பாபு உள்பட ஆண், பெண், வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : விஜய் ராஜா






கருத்துகள் இல்லை