• சற்று முன்

    80-வது இந்திய சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து மாநில முழுதும் 121 இரத்ததான முகாம்கள்


    காஞ்சிபுரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 43-வது மாபெரும் இரத்ததான முகாம்

    ஒரு மனிதரை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் என்ற திருக்குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ), காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் கிளை மற்றும் காஞ்சி அரசு தலைமை பொது மருத்துவமனையுடன் இணைந்து 43-வது இரத்ததான முகாம் ஒலிமுஹம்மதுபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.



    TNTJ கிளை தலைவர் சாகுல் ஹமீத் மற்றும் மருத்துவ அணி செயலாளர் சர்புதீன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்த தான முகாமில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாதி,மத பேதமின்றி கலந்து கொண்டு 68 நபர்கள் குருதி கொடையளித்தனர்.TNTJ காஞ்சி மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சர்புதீன் முன்னிலை வகித்தார்.



     இரத்த வங்கி அலுவலர்: டாக்டர் Dr. ராதிகா மேலும்,செய்தியாளர்ளை சந்தித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்ட மருத்துவரணி செயலாளர் சர்புதீன் காஞ்சி அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்தவும், மேலும் காஞ்சிபுரத்தில் இரத்ததான முகாம்கள் அதிகமாக நடத்துவதற்கு அரசு மருத்துவமனையில் நடமாடும் இரத்ததான வாகனம் அமைக்கவும் மற்றும் விபத்து,பிரசவ அவசர காலங்களில் சாதி மத பேதமின்றி அனைவரும் இரத்ததானம் வழங்க முன்வரவேண்டும் கோரிக்கை விடுத்தார். 80-வது இந்திய சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து மாநில முழுதும் 121 இரத்ததான முகாம்கள் நடைப்பெற்று வருகிறது என்று தெரிவித்துக் கொண்டார்.

    மேலும் காஞ்சி கிளை செயலாளர் முஜிபுர் ரஹ்மான், துணைத் தலைவர் சாகுல், து.செயலாளர் அப்துல்லாஹ், பொருளாளர் பாசில் ஆகியோர் கலந்து கொண்டு இரத்தக்கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

    என்றும் மக்கள் நலப்பணிகளில்..TNTJ காஞ்சிபுரம் கிளை, காஞ்சிபுரம் மாவட்டம்,+919498010595 / 695 / 795 ஊடகத்தொடர்புக்கு:9597775515 9787751133

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad