ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 புதிய பள்ளி வகுப்பறை கட்டடத்தினை மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே. தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார்கள்.
காஞ்சிபுரம் நசரத்பேட்டை அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஹூண்டாய் மொபிஸ் நிறுவன சமூகப் பங்களிப்பு நிதி ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 புதிய பள்ளி வகுப்பறை கட்டடத்தினை மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே. தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சினேகா, இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சி, நசரத்பேட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் திருப்பெரும்புதூர் ஹூண்டாய் மொபிஸ் கார் உற்பத்தி தொழிற்சாலை நிறுவனம் சி.எஸ்.ஆர் சமூக பங்களிப்பு நிதி ரூ. 1 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் முதல் தளங்களை கொண்டு கட்டப்பட்ட ஆறு புதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் வகுப்பறையில் மேஜை மற்றும் நாற்காலிகள் ஆண்கள், பெண்கள் மாணாக்கர்களுக்கான தனித்தனி கழிப்பறை, மேலும் பள்ளி வளாகம் முழுமையான சிசிடிவி (CCTV) கட்டமைப்பு ஆகிய பணிகள் சமூக பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்டது. இபபணிகளை இன்று மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே. தென்னரசு அவர்கள் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி ஏற்றி பார்வையிட்டார்கள்.






கருத்துகள் இல்லை