திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், “Reject Modi-Limitation” என்ற முழக்கத்துடன் இந்த அமைதிப் பேரணி நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து, கருப்பு பலூன்களை பறக்கவிட்டு அமைதிப் பேரணி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, “Reject Modi-Limitation” என்ற முழக்கத்துடன் இந்த அமைதிப் பேரணி நடைபெற்றது. நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி, தொகுதி மறுவரையறையை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் திருப்பத்தூர் காங்கிரஸ் மைதானத்தில் இருந்து தொடங்கிய பேரணி, திருப்பத்தூர் பேருந்து நிலையம் வழியாக சென்று அங்குள்ள ராஜீவ் காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. பேரணிக்கு திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜய் இளஞ்செழியன் தலைமை வகித்தார். திருப்பத்தூர் காங்கிரஸ் கமிட்டி நகரத் தலைவர் பரத்
தொடர்ந்து பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கருப்பு பலூன்கள் மற்றும் விளக்கப் பதாகைகள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ராகுல் காந்தி முன்னெடுத்து வரும் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த அமைதிப் பேரணி நடத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள், திருப்பத்தூர் காங்கிரஸ் கமிட்டி நகரத் தலைவர் பரத் அனைத்து வட்டார, நகர மற்றும் பேரூர் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள் மற்றும் அணிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.






கருத்துகள் இல்லை