• சற்று முன்

    “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” மாபெரும் உறுதிமொழி ஏற்பு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சினேகா பங்கேற்பு


    “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” மாபெரும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சினேகா, இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், கீழ்கதிர்பூர் BAV பன்னாட்டு பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை மாநில கல்லூரியில் “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” போதை ஒழிப்பு குறித்த மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சினேகா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பள்ளி, கல்லூரி மாணவ /மாணவிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதி மொழியினை வாசிக்க அனைவரும் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் எல்லோருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதைப் பொருளுக்கு எதிரான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

    போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி: போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை அவர்களை நல்வழிப்படுத்த மீட்டெடுத்து எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.

    போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதிமொழி வாசிக்க அனைவரும் எடுத்துக் கொண்டனர்.  

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.அரவிந்த், இ.கா.ப., காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. கெ.ரா.திவ்யஸ்ரீ, உதவி ஆணையர் (கலால்) திரு.அ.திருவாசகம், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) திரு.பாலகிருஷ்ணன், ஆட்சியர் (பயிற்சி) திரு. அமன் திவாரி, இ.ஆ.ப., முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர். அ.நளினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி.எம்.நிஷாந்தி, மாவட்ட மேலாளர் (டாஸ்மாக் தெற்கு) திரு.வி.கணேஷ், பள்ளி முதல்வர் முனைவர் திருமதி.மெர்சி ஸ்டெல்லா, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

    செய்தியாளர் மு.விஜயேந்திர ராஜா

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad