• சற்று முன்

    தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பேரமைப்பு சார்பில் 80வது சுதந்திர தின விழா


    தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்  பேரமைப்பு சார்பில் பேரமைப்பின் கூட்டு அரங்கில் 80வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


    நிறுவன மாநில பொதுச் செயலாளர் ஆ.வீ. கன்னையா தலைமையில், அ.ஐஸ்வரியன் வரவேற்புரை நிகழ்த்தினார். G. துரைராஜ் யூனிக் மீடியா நிறுவனர் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.


    "இந்திய சுதந்திரமும் பத்திரிகையாளர்கள் சுதந்திரமும்" என்ற தலைப்பில் மாநில தலைவர் இளசை கணேசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்தியாவில் சுதந்திர போராட்டம் முதன் முதலில் குரல் கொடுத்தவர் தமிழர்கள் தான் என்றும்  அதேபோன்று சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற முதல் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிறகு காங்கிரஸ் அதனை தொடர்ந்து  முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தான் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முதல் முதலில் குரல் கொடுத்தவர்கள் வீர மங்கை வேலு நாச்சியார், வீரன் அழகு முத்துக்கோன், கப்பலோட்டிய தமிழன் வ உ .சிதம்பரனார்  இவர்கள் போன்றவர்கள்  முதன் முதலில் குரல் கொடுத்தவர் தமிழர்களே 


    சுதந்திரத்திற்கு வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்றன வெள்ளையனே வெளியேறு உப்பு சத்தியாகிரகம் கப்பல் புரட்சி இப்படி பல போராட்டங்கள் நடத்தி இறுதியாக 1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு பத்திரிகைகளுக்கு உண்டு. பத்திரிகை வாயிலாக மக்களுக்கு சுதந்திர உணர்வுகளை ஊட்டினார்கள் ஒவ்வொரு தலைவர்களும் பத்திரிகை வைத்திருந்தனர் அந்தப் பத்திரிகை வாயிலாக மக்களுக்கு சுதந்திரத்தை பற்றி கூறினார்கள். 



    கருத்து சுதந்திரமும் இருந்தது சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு நெருக்கப்பட்டு இன்று கேள்விக்குறியாக இருப்பதை பார்க்கிறோம். இவ்வாறு இந்திய சுதந்திரமும் பத்திரிகையாளர்கள் சுதந்திரமும் பற்றி இளசை கணேசன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இறுதியாக  செய்தி தொடர்பாளர் மீரான் நன்றியுரை ஆற்றினார்



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad