• சற்று முன்

    ரோட்டரி கிளப் ஆப் காஞ்சி இன்ஃபினிட்டி சங்கத்தின் 2026-2027 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா.


    ரோட்டரி கிளப் ஆப் காஞ்சி இன்ஃபினிட்டி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் உள்ள தனியார் பார்ட்டி ஹாலில் ஜூலை 2 வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் நடைபெற்றது.



    இந்த பதவி ஏற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக Rtn. PDG. AKS. K.ஜவரிலால் ஜெயின், காஞ்சிபுரம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிசியோதெரபி சென்டர் நிறுவனர் டாக்டர். வி. ரமேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, புதிய நிர்வாகிகளை பதவியில் அமரவைத்தனர். 

    2026-2027 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகளாக தலைவர் 

    Rtn.PHF.M. சரிதா, செயலாளர் Rtn. C. சதிஷ்குமார், பொருளாளர் Rtn.PHF.S. பாலமுருகன் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

    மேலும் ரொட்டேரியன்கள்  உடனடி முன்னாள் தலைவர் கே. வெங்கடேஷ், தலைவர் தேர்வு ச. சதிஷ்குமார் மற்றும் எஸ். முரளிகிருஷ்ணன்,  எம்.கே. ஞானஒளி , ஆர். வில்வராஜ், எஸ். பாலமுருகன், ஆர். கோபாலகிருஷ்ணன், டாக்டர். எம். நிஷாபிரியா,  ஏ. எஸ். ஜெய்சங்கர்,  எம். யுவராஜ், டி.மாதானகோபால், ஏ. எஸ். ஜெய்சங்கர், எஸ். முருகேசன்,  டி. ஞானசேகரன், என். விஜயகுமார், மெடிக்கல் எஸ்.சுரேஷ், ஜே எஸ் விக்னேஷ் குமார், கே.கணேஷ், வி. பாபு,  எஸ். சுபாஷ், என். வி. ராஜேஷ்,  , எம். பாலாஜி,  பி. பாரதி, எஸ் ஞானசம்பந்தம், டி. சேகர், கே. பழனி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.


    இந்த பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியினை  ரோட்டரி கிளப் ஆப் காஞ்சி இன்ஃபினிட்டி சங்கத்தின் சாசன தலைவர், Rtn. S. முரளிகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர் சம்பத்  ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். 

    மேலும் இந்த நிகழ்ச்சியில்  புதிய தலைவர் எம்.சரிதா முரளி கிருஷ்ணன் ரோட்டரி ஃபவுன்டேஷனுக்கு   ரூ. 20000 நன்கொடை  வழங்கினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad