• சற்று முன்

    “2021 ஊழலுக்கு 2026-ல் முடிவு! வருவாய்த்துறை ஊழியர் டிஸ்மிஸ் – கலெக்டர் ப்ரியா ரவிச்சந்திரனுக்கு ராயல் சல்யூட்!”



    5 வருஷ இழுபறிக்கு முடிவு. காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 2021-ல் நடந்த ரூ.60 லட்சம் ஊழல் விவகாரத்தில், அன்று முதல் ‘விசாரணை, விசாரணை’னு இழுத்தடிக்கப்பட்ட பைலுக்கு இன்று இறுதி சாவுமணி அடித்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் IAS.

    பின்னணி:  2021-ல் உள்ளாட்சி நிதி தணிக்கை (LF Audit) நடத்திய அதிகாரி ரூ.60 லட்சம் ஊழலை கண்டுபிடித்தார். உண்மையை சொன்னதற்காக அந்த அதிகாரி தாக்கப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை விசாரணை என்கிற பெயரில் விவகாரம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. கடந்த கால மாவட்ட ஆட்சியர்கள் யாரும் தொடாத, தொட துணியாத இந்த பைலை கையில் எடுத்தார் தற்போதைய கலெக்டர்.

    அடிச்ச அடி: நீண்ட விசாரணையை முடித்து, “ஊழல் யார் செய்தாலும் தண்டனை நிச்சயம்” என நீதியை நிலைநாட்டினார். ஊழலில் நேரடியாக ஈடுபட்ட வருவாய்த்துறையைச் சேர்ந்த ஒரு அரசு ஊழியரை அரசுப் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

    “2021-ல் விதைச்ச ஊழல். 5 வருஷமா விசாரணைனு விளையாடுனாங்க. பைல் புழுதி படிஞ்சு கிடந்துச்சு. இப்போ கலெக்டர் ப்ரியா மேடம் வந்து புழுதி தட்டி, வருவாய்த்துறை ஆளை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. இது வெறும் தண்டனை இல்ல, தப்பு பண்ற எல்லாருக்கும் ஒரு பாடம். ‘லேட் ஆனாலும் லேட்டஸ்டா அடிப்போம்’னு காட்டிட்டாங்க. கலெக்டருக்கு நம் மக்களின் சப்தம் மாத இதழ்  சார்பாக ராயல் சல்யூட்!”

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad