உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு தலைமை மருத்துவமனையில் ரத்தக் கொடையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில், உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தொடர்ந்து குருதி கொடை வழங்கி உயிர் காக்க உதவும் தன்னார்வ ரத்தக் கொடையாளர்களை கௌரவிக்கும் விதமாக சான்றிதழ்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ப்ரியா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ரத்தக் கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி அவர்களின் உன்னதமான சேவையைப் பாராட்டி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவர் உஷா நந்தினி தலைமை தாங்கினார். மேலும், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ரத்தக் கொடையாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444...






கருத்துகள் இல்லை