புத்தக பை சுமையை குறைத்தாலே குழந்தைகளுக்கு முதுகு வலி வராது குழந்தைகள் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மரு. லோகேஷ் சர்மா பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்.
புத்தக பை சுமையை குறைத்தாலே குழந்தைகளுக்கு முதுகு வலி வராது குழந்தைகள் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மரு. லோகேஷ் சர்மா பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்.
காஞ்சிபுரம் எகாம்பரநாதர் சன்னதி தெருவில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனை கிளையில், சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தைகள் எலும்பியல் பிரிவு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தைகள் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மரு. லோகேஷ் சர்மா பங்கேற்று குழந்தைகளுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டார்.
இதில் பிறவிக் கால்பாத குறைபாடுகள், இடுப்பு மூட்டு பிரச்சினைகள், வளர்ச்சி மற்றும் முதுகுத்தண்டு வளைவு, கைகள் மற்றும் கால்களின் வளர்ச்சி குறைபாடுகள், கால்கள் வளைவு, எலும்பு முறிவு மற்றும் காயங்கள், விளையாட்டு காயங்கள், தொற்றால் ஏற்படும் எலும்பு பிரச்சினைகள், நரம்பியல் கோளாறுகளால் ஏற்படும் பாதிப்புகள், மூட்டு வலி மற்றும் வலாச்சி சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு குழந்தைகள் எலும்பியல் தொடர்பான நோய்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றனர். தேவையானவர்களுக்கு மேல்சிகிச்சை மற்றும் தொடர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் பரிந்துரைகள் வழங்கப்பட்டது.இம்முகாமிற்கான ஏற்பாடுகளை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் செய்திருந்தது.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த குழந்தைகள் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் லோகேஷ் சர்மா,
குழந்தைகளும் முதுகு வலி ஏற்படுவதற்கு முக்கிய காரணமே அவர்கள் அளவுக்கு அதிகமான புத்தகப் பை சுமையை சுமைப்பதினால் தான் வருகிறது, ஒரு குழந்தை தனது எடையிலிருந்து 10சதவிகித எடை கொண்ட அளவில் தான் புத்தகப் பை சுமையை சுமைக்க வேண்டும், புத்தக பை சுமையை குறைத்தாலே குழந்தைகளுக்கு முதுகு வலி வராது என அவர் பெற்றொர்களுக்கு அறிவுறுத்தினார்.






கருத்துகள் இல்லை