நூர் முகம்மதுக்கு 7-ஆம் டான் கருப்பு பட்டம் வழங்கி, "ஷிஹான்" (Shihan) என்ற கௌரவ பட்டத்தையும் வழங்கி கவுரவித்தார்
இந்தியா இஷின்ரியு கராத்தே டோ பொதுச் செயலாளர் நூர் முகம்மதுக்கு சர்வதேச அங்கீகாரம்: 'ஷிஹான்' கௌரவ பட்டம் வழங்கி கவுரவித்த கிராண்ட்மாஸ்டர் சோகே ஜெரார்டோ கான்டோரே
உருகுவே நாட்டைச் சேர்ந்த சர்வதேச கராத்தே மற்றும் கோபுடோ கிராண்ட்மாஸ்டர் சோகே ஜெரார்டோ கான்டோரே, இந்தியா இஷின்ரியு கராத்தே டோ மற்றும் கோபுடோ சங்கத்தின் பொதுச் செயலாளரும், தலைமைப் பயிற்சியாளருமான சென்செய் நூர் முகம்மதுக்கு 7-ஆம் டான் கருப்பு பட்டம் வழங்கி, "ஷிஹான்" (Shihan) என்ற கௌரவ பட்டத்தையும் வழங்கி கவுரவித்தார்.
கராத்தே கலைக்காக பல ஆண்டுகளாக மேற்கொண்ட கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சேவையைப் பாராட்டி இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இனி அவர் ஷிஹான் நூர் முகம்மது என்று அழைக்கப்படுவார்.
இந்தியாவில் கராத்தே கலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் அவரது பயிற்சி, திறமை மற்றும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய சர்வதேச அங்கீகாரத்தை சோகே ஜெரார்டோ கான்டோரே வழங்கியுள்ளார்.
இந்த சர்வதேச அங்கீகாரம் இந்திய கராத்தே உலகிற்கும் பெருமை சேர்ப்பதாக கராத்தே ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.






கருத்துகள் இல்லை