• சற்று முன்

    சுங்குவாச்சத்திரம் திருமங்கலம் ஊராட்சியில் ரூ.1.44 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட பிள்ளையார் கோவில் குளத்தை பயன்பாட்டிற்காக அமைச்சர் திரு.எஸ்.பி.கே. தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார்.


    மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே. தென்னரசு அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம். சுங்குவாச்சத்திரம் திருமங்கலம் ஊராட்சியில் ரூ.1.44 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட பிள்ளையார் கோவில் குளத்தை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    காஞ்சிபுரம் மாவட்டம். திருப்பெரும்புதூர் ஒன்றியம், சுங்குவாச்சத்திரம் அருகே உள்ள திருமங்கலம் ஊராட்சியில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பிள்ளையார் கோவில் குளத்தை மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே. தென்னரசு அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, பார்வையிட்டு, மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சினேகா, இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார். ஹூண்டாய் மோபிஸ் நிறுவனத்தின் (Hyundai Mobis) பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதி பங்களிப்புடன், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் ஒருங்கிணைப்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவாச்சத்திரம் அருகே உள்ள திருமங்கலம் கிராமத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட பிள்ளையார் கோவில் குளத்தை புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாரம்பரிய நீர்நிலையான இக்கோவில் குளத்தை நிலையான நீராதாரமாக மாற்றும் நோக்கில் குளம் தூர்வாருதல், கரைகளைப் பலப்படுத்துதல், நீர்வரத்து மற்றும் வெளியேற்றக் கால்வாய்களைச் சீரமைத்தல், பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை அமைத்தல், சுற்றுப்புற நிலப்பரப்பை பசுமையாக்குதல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்பு வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு அம்சங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல், பல்லுயிர் வளத்தைப் பாதுகாத்தல் மற்றும் எதிர்கால தலைமுறைக்கு பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கதல் ஆகிய நோக்கங்களை இத்திட்டம் நிறைவேற்றுவதாக அமையும்.  

    மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே. தென்னரசு அவர்கள் பேசியாதாவது:



    சுங்குவாச்சத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் குளம் புனரமைக்கப்பட்ட குளத்தை பார்க்கும் போது ரொம்ப அருமையாகவும், சந்தோஷமாகவும் உள்ளன. தனியார் தொழிற்சாலை முன்வந்து கிராமத்தை தத்து எடுத்து செய்வது மிகவும் பாராட்டுக்குரியது. ஹூண்டாய் மோபிஸ் நிறுவனத்திற்கு (Hyundai Mobis) என்னுடைய மனமார்ந்த பாராட்டுதல்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் கொடியசைத்து சென்று விடுவார் என்று நினைக்கும் ஆட்சி நாங்கள் இல்லை. களத்தில் இறங்கி வேலை செய்யும் ஆட்சி இந்த ஆட்சி. என்றைக்கும் மக்களோடு மக்களாக நின்று மக்களின் தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு சேவை செய்யும் ஆட்சியாக அமையும். மக்களின் அனைத்து அடிப்பைடை தேவைகளை பூர்த்தி செய்து தருவோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எண்ணங்கள் அனைத்தும் மக்களின் மீதுதான் உள்ளன. தமிழ்நாட்டிலேயே 2100-க்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ள மாவட்டம் நம் காஞ்சிபுரம் மாவட்டம். காஞ்சிபுரம் மாவட்டம் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அத்தனை முயற்சிகளையும் எடுப்போம். தனியார் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்து அடிப்படை வசதிகள் இல்லாத அத்தனை கிராமத்தையும் முன்னேற்ற சேவை செய்வோம். ஹூண்டாய் மோபிஸ் நிறுவனத்திற்கு (Hyundai Mobis) என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே. தென்னரசு அவர்கள் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் தவேக ஸ்ரீபெரும்புதூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு பார்த்திபன் , திருமங்கலம் ஊராட்சித் தலைவர் என். ரேகா நரேஷ்குமார், ஹூண்டாய் மோபிஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு பிரிவு தலைவர் திரு. ஜி. நரசிம்மன், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் தலைவர் திரு.எஸ். செந்தூர் பாரி. திருப்பெரும்புதூர் ஒன்றியக்குழுத் தலைவர் திரு.எஸ்.டி. கருணாநிதி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.இராமமூர்த்தி, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் தலைவர் எஸ். செந்தூர் பாரி. ஹூண்டாய் மோபிஸ் நிறுவனத்தின் தொடர்ச்சியான சமூகப் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார்.


    செய்தியாளர் : மு.விஜயேந்திர ராஜா





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad