• சற்று முன்

    காஞ்சி பட்டு சேலையினை தயாரிக்கும் நெசவாளர் தம்பதியினரை மாண்புமிகு கைத்தறி துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு.எம்.விஜய் பாலாஜி அவர்கள் சால்வை அணிவித்து கௌரவித்து பாராட்டினார்கள்.


    உலகப் பிரசித்தி பெற்ற பாரம்பரியமிக்க காஞ்சிபுரம் இரண்டு பக்க கோர்வை இரக காஞ்சி பட்டு சேலையினை தயாரிக்கும் நெசவாளர் தம்பதியினரை மாண்புமிகு கைத்தறி துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு.எம்.விஜய் பாலாஜி அவர்கள் சால்வை அணிவித்து கௌரவித்து பாராட்டினார்கள்.

    Uploading: 1207487 of 1207487 bytes uploaded.

    காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு கைத்தறி துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு.எம்.விஜய் பாலாஜி காஞ்சிபுரம் சுற்றுலா மாளிகையில் உலகப் பிரசித்தி பெற்ற பாரம்பரியமிக்க காஞ்சிபுரம் இரண்டு பக்க கோர்வை இரக காஞ்சி பட்டு சேலையினை தயாரிக்கும் நெசவாளர் தம்பதியினரை சால்வை அணிவித்து கௌரவித்து பாராட்டினார்கள். தொடர்ந்து நெசவாளர் தம்பதியினர் பிரசித்தி பெற்ற சேலையின் தனித்துவம் மற்றும் வேலைப்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை சார்ந்த எம். மாணிக்கம் (உறுப்பினர்எண். 1647) மற்றும் எம்.இந்திரா (உறுப்பினர் எண்.2796) தம்பதியரால் உருவாக்கப்பட்ட உலக பிரசித்திப் பெற்ற பாரம்பரியமிக்க இரண்டு பக்க கோர்வை இரக காஞ்சிபுரம் பட்டு சேலை காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர். கைத்தறி முதன்மைச் செயலர். கைத்தறி இயக்குநர், துணை இயக்குநர் (அமலாக்கம்), காஞ்சிபுரம் சரக துணை இயக்குநர் மற்றும் சங்க முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டது.


    மேற்படி நெசவாளர்களால் 40 வருடங்களாக இந்த இரக சேலைகளை நெசவு செய்யப்பட்டு உலகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவர்களின் 40 வருட நெசவுப் பணி அர்ப்பணிப்பை போற்றும் வகையில் மாண்புமிகு கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர், கைத்தறி முதன்மைச் செயலர், கைத்தறி இயக்குநர், துணை இயக்குநர் (அமலாக்கம்), காஞ்சிபுரம் சரக துணை இயக்குநர் மற்றும் சங்க செயலாட்சியர் ஆகியோர்களால் கௌரவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.

    மேற்காணும் இரண்டு பக்க கோர்வை இரக சேலைகள் பழைய அடை கட்டுதல் (குச்சிபேட்டு) முறையில் நெசவு செய்யப்படுகிறது. இச்சேலை நெய்வதற்கு கணவன் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து நெசவு பணி மேற்கொள்ள வேண்டும். இச்சேலை 17000 முறை கைகளையும், கால்களையும் ஒருசேர அசைத்து 15 நாட்கள் நெசவுப் பணி மேற்கொண்டுள்ளார்கள்.


    மேற்படி இரக சேலையில் ஒரு பக்க கரை கலர்-அரக்கு, மறுபக்க கரை கலர்-பச்சை, உடல்-மஸ்டடு, கரையில் பிள்ளையார் மொக்கு கோர்த்து வாங்கியுள்ளது. பார்டர் பவுன்பேட்டு உள்ளது. உடல் கண்ட பேருண்டா (இருதலைப்பட்சி) சரிகை புட்டா வாங்கப்பட்டுள்ளது. முந்தியில் ரேக்கு சரிகை இழையில் நெசவு செய்யப்பட்டுள்ளது

    பாரம்பரியமிக்க கலை வடிவங்களையும் உத்திகளையும் பயன்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் வகையிலான சேலைகளை உருவாக்கும் நெசவாளர்களை பாராட்ட வேண்டும். அவர்களுக்கான அங்கீகாரம் கட்டாயம் வழங்கிட வேண்டும். இவர்களுக்கு ஊக்கம் அளித்து வருங்கால இளைஞர்கள் இந்த கலையை தெரிந்து கொண்டு அவர்களும் இத்தொழிலை மேற்கொள்ள உங்களைப் போன்ற தம்பதியினர் தொடர்ந்து நெசவு தொழிலை கைவிடாமல் மேற்கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கும் உங்களுடைய கலை வடிவங்கள் உத்திகள் சென்று சேர்ந்திட இளைஞர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டுமென நெசவாளர் தம்பதியினரிடம் மாண்புமிகு கைத்தறி துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

    இந்நிகழ்வில் கைத்தறிதுறை இணை இயக்குநர்/செயலாட்சியர் (அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்) கி.கிரிதரன், கைத்தறி துணை இயக்குனர் மணிமுத்து மற்றும் பலர் உடனிருந்தனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad